மதிப்பிற்குரிய இலயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு, பழைய புதிய வாசகர்கள் நிறைய பேரிடம் பழைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடையாது. அதனால் தாங்கள் கொண்டு வந்துள்ள காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் ஒரு வரவேற்கதக்க முயற்சி. ஆனால் இதை கடமைக்காக சேகரிக்கலாமே தவிர அனைவரும் படிக்கக்கூடிய நிலையில் புத்தகத்தின் தரமோ, எழுத்துக்களோ இல்லை. ஏதோ இதை தாங்கள் கடமைக்காக இந்த இதழை போடாமல் அனைவரும் இதையும் சேகரிக்கிற மாதிரி போடலாமே? தாங்கள் ஒரு புத்தகத்தில் இரு கதைகளை போடுவதற்கு பதிலாக ஒரே கதையாக நல்லதரமாக உதாரணத்திற்கு மெக்ஸிகோ படலாம் இதுமாதிரி போடலாமே? அடிக்கடி தாங்கள் மறுபதிப்பு செய்த கதைகளையே திரும்ப திரும்ப போடாமல் இதுவரை மறுபதிப்பே செய்யாத நல்ல கதைகள் நிறைய உள்ளன. அவையெல்லாம் தாங்கள் வெளியிட்டால் இன்னும் சிறப்பாகவும், அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அன்புடன் ப்ருனோ