தன்னை தானே தேடும் ஒரு சாகசகாரனின் கதை


துப்பாக்கியால் சுடப்பட்டு தன்னுடைய நினைவாற்றலை இழந்து உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனை மீட்டு அவருடைய உயிரை காப்பாற்றி தன்னுடனே வைத்திருக்கும் ஒரு வயதான தம்பதியினர். அவருககு இருக்கு ஒரே அடையாளம் XIII என்ற எண் மட்டுமே.

தீடிரென ஒருநாள் கொலைகார கும்பல் ஒன்று அங்கு வந்து அந்த வயதான தம்பதிகளை XIII யும் கொல்ல முயற்சிக்கிறார்கள். திறமையாக அவர்களுடன் போராடி அவர்களில் சிலரை கொன்று விடுகிறான். அந்த குமபலின் தலைவன் மங்கூஸ் மட்டும் தப்பி விடுகிறான்.

இவர்கள் ஏன் கொல்ல வந்தார்கள்? தான் யார் போலீஸா? கொலைகாரனா? தனக்கு குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி ஈஸ்ட் டவுன் என்னும் ஊருக்கு செல்கிறான்.

தான் செல்லும் ஊரெல்லாம் ஒவ்வொரு பெயரில் இருந்திருப்பதை கண்டு மேலும் குழப்பமடைகிறான்.தான் ஸ்டீவ் ராலாண்ட் என்னும் பெயரில் ஜனாதிபதியை கொன்று இதற்காக ஒரு பெருந்தொகையை பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

இந்த பணத்திற்காக ஒரு கும்பல் அவனை துரத்துகிறது. ஒரு பக்கம் கொலைகார கும்பல் ஒன்று அவனை கொல்ல துரத்துகிறது. ஒரு பக்கம் ஜனாதிபதியை கொன்ற குற்றத்திற்காக விசாரணை கமிஷன் அதிகாரி துரத்துகிறார். எல்லோரிடமிருந்தும் தப்பி எல்லா உண்மைகளையும் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது தான் இந்த தொடரின் கதை.

ஒரு சதிகார கும்பல் அதில் பதிமூன்று பேர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களுக்கு பெயர்கள் கிடையாது. எண்கள்தான் அவர்களுக்கு அடையாளம். அந்த எண்களை தங்கள் நெஞ்சில் பசைச் குத்திக் கொள்வார்கள். இந்த குழுவில் உள்ள கூலிப்படைத் தலைவன் மங்கூஸ் இதே குழுவில் உள்ள காப்டன் ஸ்டீவ் ராலண்ட் என்னும் ராணுவ அதிகாரியை ஜனாதிபதி வில்லியம் ஷெரிடனை கொல்ல நியமிக்கிறார் இவரும் ஜனாதிபதியை கொன்று அதற்கு சன்மானமாக பெருந்தொகையை பெற்றுக் கொண்டு வரும் வழியில் அவரையும் அந்த கூட்டத்தில் உள்ளவர்களால் கொல்லப்படுகிறான். ஜனாதிபதியின் அப்பா பெரும் செல்வந்தர். அவருக்கு மிகவும் விசுவாசமானவர்களை மட்டும் அழைத்து என் மகனை கொன்றவர்கள் யார்? அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன? அந்த அங்கத்தில் உள்ளவர்களை எல்லாம் கண்டறியவும் உண்மைகளை கண்டறியவும் ஒரு குழுவை உருவாக்குகிறார். இந்த கதையின் ஹீரோ ஜேஸன் ப்ளை கியூபாவில் கொரில்லா போர் பயிற்சி பெற்ற ஒரு சகலகலா வல்லவர் இந்த குழுவில் அவரும் பங்கு பெறுகிறார்.

அவருக்கு ஸ்டீவ் ராலண்ட் போலவே முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றி அமைத்து அவருடைய மனைவி கிம் ராலாண்ட் மூலம் ஜேஸன் ப்ளைக்கு நடைஉடைபாவனைகளை எல்லாம் சொல்லித் தந்து அச்சு அசலாக அவரைப்போலவே உருவாக்கி அந்த கும்பலை கண்டறிய அனுப்புகிறார்கள். இவரையும் அந்த சதிகார கும்பல் சுட்டுத் தள்ளி விடுகிறது.

அதன்பிறகுதான் உயிர் பிழைத்து தன் நினைவாற்றலை இழந்து தன்னுடைய கடந்த காலங்களை தேடி பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி பெரும் போராட்டத்திற்கு பின் சதிகார கும்பலில் உள்ள அனைவரின் முகத்திரையை கிழித்து அந்த கும்பலின் தலைவன் வாலி ஷெரிடன் (எண் 1) (கொல்லப்பட்ட ஜனாதிபதியின் தம்பி) என்பதையும் தான் நிரபராதி என்பதையும் மற்ற அனைத்து உண்மைகளையும் நீதியின் முன் நிறுத்தி தான் குற்றமற்றவர் என நிருபணமாகி விடுதலையாகிறார்.

அற்புதமான விறுவிறுப்பான இந்த கதைக்கு இப்படியும் ஒவியங்களை வரைய முடியுமா? என்று பலபேர்களின் புருவத்தை உயர்த்தி வியக்க வைத்துள்ளார் வில்லியம் வான்ஸ். காமிக்ஸ் கதைகளில் இதை ஒரு மகுடமாக சேர்க்கலாம்.

நான் மிகவும் இரசித்து படித்த காமிக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று.

பின்குறிப்பு

இந்த கதை ஒரிஜினல் பிரன்ஞ் மொழியில் 19 பாகங்களாக வெளிவந்துள்ளது. இதை ஒரே இதழாக நமது இலயன் காமிக்ஸில் அடுத்த வருடம் லயன் கலெக்டர்ஸ் ஸ்பெஷலாக ரூ.200 விலையில் பெரிய அளவில் பிரமாண்டமாய் 800 பக்க இராட்சஸ சைஸில் வெளிவருகிறது.

Comments

 1. நண்பரே,

  எங்களை மேலும் காக்க வைக்காதீர்கள்.

  அதி விரைவில் இந்த இடுகையை வெளியிடுங்கள்.

  இல்லைஎனில் அ கோ தீ கவின் தலைவரிடம் உங்களின் ரகசிய மறைவிடத்தை கூறி விடுவேன்.

  கிங் விஸ்வா.

  Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

  ReplyDelete
 2. Hi boss, you've done an amazing job. I was damn happy to see the fan site for my most favorite comics.

  However, i've set a facebook club for Lion/Muthu and all other comics.

  Please visit the group and invite your friends.

  http://www.facebook.com/group.php?gid=37137139775

  Adios Amigo.

  ReplyDelete
 3. இந்த வசனங்கள் எல்லாமே இரத்தப்படலம் இரண்டாம் பாகத்தில் வரும் முன்கதை சுருக்கம் போல உள்ளதே?

  எனினும், உங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. இதனை படித்தாலாவது வாசகர்கள் இந்த புத்தகத்தை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த அட்டைப்படம் எத்தனையாவது பாகத்தினுடயது? ஹெலிகாப்டரில் தோன்றும் அட்டை?

  ReplyDelete
 4. மதிப்பு மிகு முதலை அவர்கட்கு,

  நேற்று XII MYSTERY- LA MANGOUSTE [R.MEYER/X.DORISON]ஆல்பத்தை படிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.ஸ்டீவ் ராலண்டை, ஜனாதிபதியை கொலை செய்ய நியமித்தது மங்கூஸ்ட் அல்ல.

  சிறப்பான கதைச்சுருக்கம், உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)