Tuesday, December 9, 2008

சூப்பர் சர்க்கஸ்

லக்கி லுக்கை தெரியாதவர்களுக்கு மட்டும்,
வழக்கமான கௌபாய் ஹீரோக்களை கிண்டல் செய்வதற்காக உருவாக்கப்பட்டவர்தான் லக்கி லுக். தன் நிழலை விட வேகமாக சுடக் வடிய திறமை வாய்ந்தவர். குதிரை சவாரி செய்வதில் கில்லாடி. இவருக்கு இருக்கும் ஒரே உற்ற தோழன் தன்னுடைய குதிரை ஜாலி ஜம்பர் மட்டுமே. புத்திசாலியான திறமை வாய்ந்த குதிரையும் கூட. இவர்களுக்கு இலக்கே கிடையாது. தாங்கள் செல்லும் வழியெல்லாம் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் அப்பாவிகளுக்கு உதவுவதே இவருடைய தலையாய கடமை. இவருடைய கதைகள் எல்லாமே சிரிப்பு தோரணமாகவே அமைந்திருக்கும். இனி கதை.
கோயட் கோட்டை என்னும் நகரத்தில் குதிரை போட்டி வருடந்தோறும் நடைபெறும். அதி கலந்து கொள்வதற்காக லக்கி லுக் செல்கிறார். செல்லும் வழியில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் சர்க்கஸ் குழுவினருக்கு உதவி செய்து அவர்களையும் தம்மோடு கோயட் கோட்டைக்கு பத்திரமாக அழைத்து செல்கிறார். அந்த ஊரில் ரீகன் என்னும் கொடியவன் அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். வருடந்தோறும் குதிரை போட்டியை பார்த்த ஊர் மக்களுக்கு புதிதாக ஊருக்குள் வரும் சர்க்கஸ் காண ஆவலோடு இருக்கின்றனர்.
இதை அறிந்த ரீகன் தான் நடத்தும் குதிரைப் போட்டிக்கு போட்டியாக வந்த சர்க்கஸை அங்கிருந்து துரத்த சாரைப்பாம்பு சார்லி என்னும் திறமையான துப்பாக்கி வீரனை அனுப்புகிறான். இதை அறிந்த லக்கி லுக் அவனை சர்க்கஸ் குழுவினரிடம் சிக்க வைத்து படாத பாடு படுத்துகிறார். தான் பட்ட அவஸ்தைகளால் எதிரில் வரும்யானையை கூட குறிபார்த்து சுட முடியாமல் அங்கிருந்து தலைதெறிக்க ஒடி வந்து விடுகிறான். தன் திட்டம் தோல்வியடைந்ததை கண்டு தானே செயலில் இறங்குவது என்று முடிவெடுத்து தன் அடுத்த நாச வேலையை செவ்விந்தியர்கள் மூலமாக சர்க்கஸ் கூடாரங்களை தீக்கு இரையாக்குகிறான். சர்க்கஸ் நடத்த முடியாமல் நின்று விடுகிறது. ஊர் மக்களும் வேறு வழியில்லாமல் குதிரை போட்டியை காண செல்கின்றனர். முடிவில் இதுதான் சமயம் என்று எண்ணி சர்க்கஸ் குழுவினரும் குதிரை போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய கோமாளித் தனமான திறமைகளை நிருபித்து அனைவரையும் இரசிக்க வைத்து சிரிக்க வைக்கிறார்கள் மக்களின் ஆர்வத்தையும் இவர்களுடைய திறமைகளையும் நேரில் கண்டு மனம் திருந்திய ரீகனும் சர்க்கஸில் தானும் ஒருபார்ட்னராக சேர்ந்து கொண்டு உலகம் முழுவதும் சர்க்கஸின் புகழை பரப்புகிறார்கள்.
இந்த சீரியஸான கதையை காமெடித் திருவிழாவாக வரைந்து அசத்தியுள்ளார் கோஸ்ஸினி மற்றும் மௌரிஸ். நான் இரசித்து படித்த காமிக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று.7 comments:

 1. //நான் இரசித்து படித்த காமிக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று// ரிபீட்டேய்.

  இந்த கதையை படிக்க புத்தகம் கொடுத்து உதவிய திரு காமிக்ஸ் டாக்டருக்கு நன்றி.

  கிங் விஸ்வா.

  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. நண்பரே,

  மொரிஷ், கொச்சினியின் கூட்டணி ஒர் வெற்றிக்கூட்டணி. அவர்கள் இருவரும் உருவாக்கிய கதைகள் சோடை போனது கிடையாது.

  துரதிர்ஷ்டவசமாக லக்கி லுக்கின் தற்போதைய நிலை இதற்கு எதிர்மாறானது, இவ்வாரம் ஒர் லக்கி லுக் ஆல்பம் வெளியாகிறது L'HOMME DE WASHINGTON=வாஷிங்டன் பேர்வழி இது எப்படி என்பதை காண சற்றுப்பொறுத்திருப்போம்.

  ஒர் கதையில் தினசரி ஒன்றை அச்சிட காப்பித்தூளை பயன்படுத்துவார் லக்கி லுக், வாசகர்கள் படித்து முடித்தவுடன் அத்தினசரியை பாலில் தோய்த்து காப்பி குடிப்பார்கள். இது என் மனதை விட்டு நீங்காத காட்சியாகும்.

  தமிழ் ஸ்கேன்களிற்கு நன்றி, உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 3. //ஒர் கதையில் தினசரி ஒன்றை அச்சிட காப்பித்தூளை பயன்படுத்துவார் லக்கி லுக், வாசகர்கள் படித்து முடித்தவுடன் அத்தினசரியை பாலில் தோய்த்து காப்பி குடிப்பார்கள். இது என் மனதை விட்டு நீங்காத காட்சியாகும்//

  அந்த கதை லக்கி லூகின் சூப்பர் ஹிட் ஆகிய "புரட்சி தீ" ஆகும். இந்த கதை (மற்ற லக்கி லுக் கதைகளை போலவே சரித்திர நாயகர்களை மைய்யமாக கொண்டே அமைந்தது - இந்த கதையில் பத்திரிக்கையாளர் ஹோராஸ் அவர்களை மைய்யப் படுத்தி இருப்பார்).

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. Buddy,

  It's so nice to read this review with some of "Super Circus" comics pages..

  Though this comics and some other comics available in english, the translation is not at all equal to what our editor S. Vijayan has gifted to us.
  Thanks dude..

  Trust me, I have Blueberry's original english versions too..
  But my opinion is translation of Blueberry's to tamil by Muthu/Lion comics is much better than what they did for english versions.

  Regards,
  Mahesh kumar

  ReplyDelete
 5. Can somebody write up a review about "Puratchi Thee", which is one of the greatest comics I ever read.

  Regards,
  Mahesh kumar

  ReplyDelete
 6. உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

  ReplyDelete
 7. BOSS WHO WOULD FORGET THIS FIRST BOOK OF LUCKYLUKE IN COLOUR THAT TOO FOR THE PRICE OF RS2!!!NONE CAN MATCH THAT FEET.ITS NOTHING BUT A FUN RIOT.

  ReplyDelete

2018 அட்டவணையும் சில கருத்துக்களும்

2018 அட்டவணையில் பட்டாசுகளும், புஸ்வானங்களுமாய் நிறைந்துள்ளது  பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிருப்தியையும் தந்துள்ளது  இந்த  அ...