2018 அட்டவணையும் சில கருத்துக்களும்

2018 அட்டவணையில் பட்டாசுகளும், புஸ்வானங்களுமாய் நிறைந்துள்ளது பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிருப்தியையும் தந்துள்ளது இந்த அட்டவணை. டியுராங்கோ பலரின் எதிர்பார்ப்பில் இருக்கும் நாயகர், புதியவர் ட்ரெண்ட்டை வரவேற்பதில் தவறில்லை. லார்கோ, ஷெல்டன், ரிப்போட்டர் ஜானி, ஜில் ஜோர்டான் போன்றோரும் எதிர்பார்ப்பு நாயகர்கள்தான். மாடஸ்டி ப்ளைஸி, லேடி எஸ்க்கு ஒரு ஸ்லாட் ஒதுக்கியது போல் ஜூலியாவுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். ராபின் & மார்ட்டீனுக்கு இன்னொரு வாய்ப்பும் கூடுதலாக வழங்கிருக்கலாம். டெக்ஸ் வில்லர் சென்ற வருட கதைகளில் சில கதைகளில் முத்திரை பதிக்க தவறி விட்டார், அந்தக்குறையை இந்த வருடத்தில் போக்கிடுவார் என்றே தோன்றுகிறது. 70 வது ஆண்டு மலர் சிறப்புமிக்க ஆண்டாக தோன்றுமின்றே தோன்றுகிறது. அதுவுமில்லாமல் சந்தாதாரர்களுக்கு கொடுக்கும் இலவச 6 டெக்ஸ் கதைகளையும் மொத்தமாக ஒரே இதழாக தர முயற்சித்திருக்கலாம். பாதுகாக்கவும் வசதியாக இருக்கும், அந்த தொகுப்பையே டெக்ஸ் சிறுகதை தொகுப்பு என்ற பெயரில். 150 விலையில் கடைகளிலும் விற்பனை செய...