வன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி
1996 – ம் வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு தங்கக் கல்லறை என்கிற கதை மூலமாக ப்ளுபெர்ரி ( கேப்டன் டைகராக ) அறிமுகமானார்.
பிரெஞ்சு காமிக்ஸ் இதுவரை 49 ஆல்பங்கள் ( இளம் டைகர் தொடரில் - 20, லெப்டினெண்ட் தொடரில் - 23, மார்ஷல் தொடரில் - 3 மிஸ்டர் ப்ளுபெர்ரி தொடரில் - 5 ) வெளிவந்த நிலையில், தமிழில் இதுவரை 38 ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர். மற்ற கதைகளும் விரைவில் வரக்கூடுமென்றே தோன்றுகிறது. இதுவரை தமிழில் வெளிவந்துள்ள ப்ளுபெர்ரி என்கிற கேப்டன் டைகரின் கதைகளின் விபரங்களை (படங்களுடன்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி.


தமிழில் வெளிவந்த முதல் ப்ளுபெர்ரியின்(கேப்டன் டைகர்) சித்திரக்கதை என்ற சிறப்பு தங்கக் கல்லறைக்கு உண்டு. 1996 ல் கருப்பு வெள்ளையிலும், பின்னர் ஒரே இதழாக ( இரு கதைகளாக) முழு வண்ணத்தில் 2012 ல் மறுபதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
இரும்புக்கை எத்தன் & பரலோகப்பாதை ஆகிய இரு ப்ளுபெர்ரி கதைகளும் கருப்பு வெள்ளையில் 1997 ல் முத்து காமிக்ஸில் வெளிவந்தது, இதன் அடுத்த பாகங்கள் வெளியிடப்படாமலே பல வருடங்களாக (ஏறக்குறை 17 வருடங்கள்) நிலுவையிலேயே இருந்தன. பின்னர், 2013 ல் இரும்புக்கை எத்தன் & பரலோகப்பாதை ஆகிய இரு கதைகளையும் முழு வண்ணத்தில் மறுபதிப்பாக சன்ஷைன் லைப்ரரி என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்த இதழ் வெளிவந்த அடுத்த மாதமே இதன் தொடர்ச்சிகளான இரத்தத்தடம் & தலை கேட்ட தங்கத் தலையன் ஆகிய இரு புதிய கதைகளையும் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது.
மின்னும் மரணம் மூன்று பாக கதைகளையும் ஒரே இதழில் கருப்பு வெள்ளையில் 1998 ல் வெளியிட்டனர். பின்னர், சிறையில் ஒரு புயல் ( 4 வது பாகம் - 2000), திசை திரும்பிய தோட்டா( 5வது பாகம் - 2001), புயல் தேடிய புதையல் ( 6&7 வது பாகம்) இவை அனைத்தும் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது. இதன் கடைசி மூன்று இதழ்கள் மட்டும் (கானலாய் ஒரு காதல் நீங்கலாக) ஒரே இதழாக காற்றில் கரைந்த கூட்டம் என்ற பெயரில் லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷலில் -( 2004) வெளி வந்தது. இதன் பின்னர் ஏற்கனவே வெளிவந்த பழைய பத்து கதைகளையும் + கானலாய் ஒரு காதல் என்ற புதிய கதைகளுடன் ஒரே ( மெகா) இதழாக பெரிய சைஸில் வண்ணத்தில் 2015ல் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது.
முத்து காமிக்ஸில் கருப்பு வெள்ளையில் வெளிவந்த இதழ் வருடம் -2002.
2004 ல் கருப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸில் வெளிவந்த இரத்தக் கோட்டை (ஐந்து பாகம்) கதை. வருகிற ஆகஸ்ட் (2017) மாதத்தில் மறுபதிப்பாக ஒரே (மெகா) இதழாக வண்ணத்தில் வெளிவரப்போகிறது.
இளவயது ப்ளுபெர்ரி கதைகளில் இதுவரை ஒன்பது கதைகள் தமிழில் வெளிவந்துள்ளது. அதில் முதலாவதாக கெளபாய் ஸ்பெஷலில்(லயன் காமிக்ஸ்) இளமையில் கொல் (2007) என்ற மூன்று பாக கதைகளை ஒன்றாக வெளியிட்டனர், அதன் பிறகு ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷலில்
மரண நகரம் மிசெளரி (2012) என்ற கதையையும்,அதன் பிறகு கான்ஸாஸ் கொடூரன் & இருளில் ஒரு இரும்புக் குதிரை ( 2013) இவை இரண்டும் முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷலும், இதற்கு அடுத்து வேங்கையின் சீற்றம் (2013, இறுதியாக அட்லாண்டாவில் ஆக்ரோஷம்&உதிரத்தின் விலை (2014) ஆகிய இரு கதைகளும் வெளிவந்துள்ளன.
பின் குறிப்பு -
இளமையில் கொல் கதையின் முதல் பாகம் மட்டும் இள இரத்தம் என்ற தலைப்பில் இலங்கையில் ஐஸ்பேர்க் என்ற காமிக்ஸில் வெளியாகியுள்ளது. அதன் முகப்பு அட்டை மேலே உள்ளது.
மார்ஷல் ப்ளுபெர்ரி வரிசையில் மூன்று கதைகள் மட்டுமே வந்துள்ளன. அதில் முதலாவதாக 2014 ல் வெளிவந்த லயன் மேக்னம் ஸ்பெஷலிலும்
(2014) இதற்கு அடுத்து வேங்கைக்கு முடிவுரையா? (2015) என்ற கதைகளில்
2 & 3 பாகத்தை ஒன்றாக வெளியிட்டுள்ளனர். இந்தக் கதைகளுக்கு மட்டும் புகழ்பெற்ற( இரத்தப்படலம்) ஓவியர் வில்லியம் வான்ஸ் ஓவியம் வரைந்துள்ளார்.
கேப்டன் டைகர் கதை வரிசையில் 2002 இல் வெளிவந்த தோட்டா தலை நகரம் கதையை மீண்டும் மார்ச் 2018 இல் வண்ண மறுபதிப்பாக வெளியிட்டுள்ளனர்.
கேப்டன் டைகர் கதை வரிசையில் இறுதியாக வெளிவந்த கதை
இளமையில் கொல் (மறுபதிப்பு) மூன்று பாக கதைத் தொடரில் முதல் கதையை ஜூன் 2019 இல் வண்ண மறுபதிப்பாக வெளியிட்டுள்ளனர். மற்ற இரு பாகங்களும் அடுத்த வருடம் (2020) எதிர்பார்க்கலாம்!
இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து கதைகளின் கதைகளையும் தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் ஏதேனும் நிறை குறைகள் இருப்பின் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி.
Nice
ReplyDeletethanks ji
Deleteடைகர் கதை வரிசைகளில் எப்பொழுதும் எனக்கு சிறு குழப்பம் நிலவுவதுண்டு..
ReplyDeleteஅதை ஒன்றுக்கு இரண்டு பேராக( மாயாவி சிவா & டெக்ஸ் சம்பத் ) விசாாித்தும் புாிந்து கொள்ளாமல் ஒரு குழப்பத்துடன்தான் இருந்தேன்..
(திரும்பவும் அவர்களிடம் கேட்கவும் சிறு தயக்கமிருந்தது)
ஏனெனில் என்னிடம் அந்த புத்தகங்கள் இருக்குமா இருக்காதா என்று தெளிவற்றிருந்தேன் ஆனால் உங்களின் இந்த முறைப்படுத்தப்பட்ட வெளியீடுகளின் முகப்பு பக்கங்களை பாா்த்தபின் தெளிவாக புாிந்து கொண்டேன் ...
வழக்கம் போல உங்களின் காமிக்ஸ் கலைச்சேவை தொடரட்டும்...
மிகவும் நன்றி அண்ணா..
உங்களைப் போல நிறைய பேருக்கு இந்த சந்தேகங்கள் இருந்திட்டே இருக்கு பிரதர்,சமீபத்தில் கூட எனது நண்பர் ஒருவருக்கு இதைப் பற்றி விளக்கிச் சொன்னேன். அதன் பிறகு தான் இதைப்பற்றி தெளிவாக ஒரு பதிவு போட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. உங்கள் கருத்துக்கும் நன்றி பிரதர்.
DeleteExcellent article bro , hats off to your comics enthusiasm , please write articles like this continuously,
ReplyDeletei will try, thank you bro
Deleteதொகுப்புகள்
ReplyDeleteஅருமை
பின்னாளில் இதை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்த வரிசைப்படி உபயோகமாக இருக்கும்
நன்றிகள் ன்னா
உண்மைதான், டைகர்ர்ர்னா இனி யாரும் குழம்ப வேண்டியது இருக்காது, நன்றி ப்ரோ
Deleteஅருமை கலீல் பாய்...!!!
ReplyDeleteஉண்மையைய் சொல்லப்போனால் ...நானே மறந்து போன, கடந்து வந்த பாதையை மிக சரியாக வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.
ஆகஸ்டில் வரப்போகும் டைகர் இதழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துவிட்ட பதிவு இது.
நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ப்ரூனோ பரேஸில் என்கிற நமது பழைய நாயகனின் பெயரை வாசித்ததும் ஒரு பரவசம்...
நன்றி நண்பரே
நன்றி பாய்...!
Deleteபுகுந்து விளையாடுங்கள் நண்பரே.அருமையான அழகான பதிவு .இதுபோன்று ஒவ்வொரு ஹீரோக்கும் செய்யலாமே.முதலில் நம்ம தலையிலே ஆரம்பிக்கலாமா.ப்ளீஸ்
ReplyDeleteஹா ஹா நம்ம தலையிலேயே ஆரம்பிக்கலாமா? ஆரம்பிக்கலாம் நண்பா :0
Deleteகலீல் அண்ணா: நன்றாக வடிவமைத்த பதிவு. ஒரு சிறு திருத்தம். புயல் தேடிய புதையல் 6 & 7 என சொல்லப்பட்டுள்ளது. தமிழ் வரிசை படி "புயல் தேடிய புதையல்" - 9 & 10. மெகாட்ரீம் ஸ்பெஷலில் வெளிவந்த "காற்றில் கரைந்த கூட்டம்" தான் 6, 7 & 8 ஐ தாங்கி வந்த தொகுப்பு. கானலாய் ஒரு காதல் இவை அனைத்தையும் தாண்டி 11ம் பாகம்.
ReplyDeleteSuper kaleel ji very informative!!!
ReplyDeleteSuper kaleel ji very informative!!!
ReplyDeleteவாவ் ! மிக்க நன்றி கலீல் பாய். மஞ்சள் சட்டைக்காரரும் பரட்டைத் தலையரும் எனக்கு மிகவும் பிடித்த வன்மேற்கு கதாநாயகர்கள்.
ReplyDelete(மின்னும் மரணத்தை வர்ணத்தில் தற்போது இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன் )
மிகவும் உதவியாக இருந்தது.. இதன் மூலம் என்னிடம் இல்லாத கதைகளை வரிசைப்படுத்த முடிந்தது.
ReplyDelete