மதிப்பிற்குரிய திரு, எஸ் விஜயன் அவர்களுக்கு, அச்சு காகிதத்தின் திடீர் விலை உயர்வால் தாங்கள் எங்களுக்கு வைத்துள்ள மூன்று Options 1) விலையேற்றலாமா? 2) பக்கங்களை குறைக்கலாமா? 3) சைஸை குறைக்கலாமா? இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் புத்தகத்தின் விலையை ரூபாய் 15 என்று உயர்த்தி விட்டு சில பக்கங்களை கூடுதலாக சேர்த்து வெளியிடலாம். அல்லது சைஸை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வழக்கமான பக்கங்களுடன் வெளியிடலாம். எக்காரணத்தை முன்னிட்டும் பக்கங்களையோ, சைஸையோ குறைப்பதை தாங்கள் தவிர்த்து விடவும். தற்போதைய அனைத்து வார இதழ்களும், மாத இதழ்களின விலையேற்றத்தையும் மற்ற விலைவாசி உயர்வையும் அனைவருமே அறிவார்கள். ஆதலால், தாங்களும் தயங்காமல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ப்ரூனோ ப்ரேசில்