இலயன் காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் பற்றி ..................

மதிப்பிற்குரிய இலயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு,
பழைய புதிய வாசகர்கள் நிறைய பேரிடம் பழைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடையாது. அதனால் தாங்கள் கொண்டு வந்துள்ள காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் ஒரு வரவேற்கதக்க முயற்சி.
ஆனால் இதை கடமைக்காக சேகரிக்கலாமே தவிர அனைவரும் படிக்கக்கூடிய நிலையில் புத்தகத்தின் தரமோ, எழுத்துக்களோ இல்லை. ஏதோ இதை தாங்கள் கடமைக்காக இந்த இதழை போடாமல் அனைவரும் இதையும் சேகரிக்கிற மாதிரி போடலாமே?
தாங்கள் ஒரு புத்தகத்தில் இரு கதைகளை போடுவதற்கு பதிலாக ஒரே கதையாக நல்லதரமாக உதாரணத்திற்கு மெக்ஸிகோ படலாம் இதுமாதிரி போடலாமே?
அடிக்கடி தாங்கள் மறுபதிப்பு செய்த கதைகளையே திரும்ப திரும்ப போடாமல் இதுவரை மறுபதிப்பே செய்யாத நல்ல கதைகள் நிறைய உள்ளன. அவையெல்லாம் தாங்கள் வெளியிட்டால் இன்னும் சிறப்பாகவும், அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்

அன்புடன்
ப்ருனோ

Comments

  1. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்ர்க்கு

    தொடருங்கள் உங்கள் சேவையை. இன்னும் சற்று விரிவாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. திருவாளர் முதலை அவர்கட்கு,

    நீங்கள் என்ன கூறினாலும் முத்து, லயனை விட அதிகம் விற்கும், காமிக்ஸ் கிளாசிக்குகளில் விஜயன் சார் மாற்றங்களை ஏற்படுத்தபோவதில்லை. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. இந்த பொன்னான கதைகள் தடித்த அட்டையுடன், சற்று பெரிய அளவில் வந்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் சிறிய அளவு=அதிக விற்பனை எனும் பார்மூலாவில் தொங்கி கொண்டிருக்கும் இதயங்களை யார் மாற்ற முடியும் [அவர்களிலும் பிழை கூற முடியாது. புத்தகங்களை விற்காமல் எவ்வாறு அவர்களால் தொடரமுடியும் ]

    நீங்கள் கூறியது போன்று, ``கழுகு மலைக்கோட்டை’
    ``ஒற்றன் வெள்ளை நரி’’,பிலிப் காரிகன் கிளாசிக்குகளை ஆசிரியர் பிரசுரிக்கலாமே. காத்திருப்போம்.

    ReplyDelete
  3. Hi,

    there is a factual mistake that you have done over here. The focal point of starting comics classics was to re-live the golden oldies to the new generation of comics fans.

    hence the concept of publishing the new ones in this series seems to be out of place.

    As suggested by the other commenter, the editor can go for corrigan stories.

    Cheers.

    Udhayam Sami.

    ReplyDelete
  4. hi there,

    nice update. been so long that i was out of blogosphere. many many new comers.

    all the best.

    ReplyDelete
  5. நண்பர் முதலைப் பட்டாளத்தாரே,

    இப்போது உள்ள சுழ்நிலையில் கிளாசிக்ஸ் பிதகங்களை ருபாய் இருபது விலையில் வைத்து வெளியிட்டாலும் அதில் தவறேதும் இல்லை. ஆசிரியர் உணர்வாரா?

    கிங் விஸ்வா.
    Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

    ReplyDelete
  6. முதலை பட்டாளத்திற்கு!

    'வாராது வந்த மாமணியே' என்ற ஏக்கத்தோடுதான் லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் போன்ற இதழ்களை பார்க்க வேண்டியுள்ளது. எப்போதாவது தலைக்காட்டும் அவற்றை குறை கூறுவது அல்லது மேம்படுத்த கூறுவது 'தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையாக' தான் இருக்கும். இருப்பினும் உங்களது அபிலாசை நிறைவேறினால் எலோருக்கும் சந்தோசமே!

    ReplyDelete
  7. Please tell me where CLassic Comics available in Chennai. Pls mention the shop address.

    ReplyDelete
  8. BOSS THERE IS NOTHING WRONG IN YOUR SUGGESTION BUT STILL WE HAVE TO CONCIDER ABOUT THE MARKETING PROBLEMS OF OUR BELOVED EDITOR.THOUGH ITS A MYSTERY WHY HE IS NOT REPRINTING KARRIGON, CHARLIE STORIES IN CC I STILL BELEIVE THAT HE IS DOING HIS BEST ANYWAY THE FONT PROBLEM IS REALLY A THING TO BE ADDRESED.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்