லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு,

சில காலம் முன்பு திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த ஸ்பைடரின் விண்வெளி பிசாசு மற்றும் கேப்டன் ஜானின் விண்ணில் முளைத்த மண்டை ஓடு ஆகிய சித்திர தொடர்கள் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸ் நிறைந்தவையாகவும் இருந்த தொடர்கள். படித்த அனைத்து காமிக்ஸ் இரசிகர்கள் மனதையும் கவர்ந்த தொடர்களும் கூட.

இந்த இரு தொடர்களையும் தாங்கள் மீண்டும் மறுபதிப்பாக ஒரே இதழாக காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் வெளியிட்டு அந்த இரு சித்திர தொடர்களையும் சிறப்பு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் வாசகன்...


ப்ரூனோ ப்ரேசில்

Comments

 1. புருனோ,

  நல்ல அறிவுரை இது. ஆனால் நான் கேள்வி பட்ட வரையில் அடுத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ் தயார் ஆகி கொண்டு இருக்கிறது என்பது தான். அதனால் ஆசிரியர் அடுத்த புத்தகம் கொண்டு வரும்போது இதனை பற்றி யோசிக்கலாம்.

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 2. புருனோ பிரேசில்,

  உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஆசிரியர் இவ்விரு கதைகளையும் மீளப் பதிப்பித்தார் எனில் நான் மிக மகிழ்சியடைவேன்.ஏனெனில் இக்கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு இது வரை கிடைக்கவில்லை.

  உற்சாகத்துடன் தொடருங்கள்

  ReplyDelete
 3. புருனோ,

  இந்த கதைகள் எல்லாமே திகில் காமிக்ஸ்'இல் தொடர் கதையாக வெளி வந்தவை என்பதால் இவற்றை படிக்கும் வாய்ப்பு மற்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு சற்று குறைவுதான். எனவே தங்களின் தேர்வு மிகவும் சிறப்பானது ஆகும். வாழ்த்துக்கள்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. நல்ல வேண்டுகோள்...

  ReplyDelete
 5. From The Desk Of Rebel Ravi:

  super selection. may be he can also bring back the vedhalan series or the phil corrigan series in comics classics.


  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 6. SURE BOSS IT WILL BE NICE FOR THOSE WHO MISSED TO READ EARLIER,INFACT FOR EVERYONE TOO.

  ReplyDelete
 7. Good Idea. I agree with you, Bruno Brazil. I ve desired this too. We will wait for the consideration of Mr. Vijayan Sir.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)