பற்றி எரியும் பாலைவனம்
தென் ஆப்பிரிக்காவின் கடலோர கிராமங்கள் அங்கு நடக்கும் உள்நாட்டு புரட்சிகளால் மிகவும் பாதிப்புகுள்ளாயின. வெளி தொடர்புகள் அறுந்து போன நிலையில் அங்கு பசி, பட்டினி, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பல உயிர்கள் மடிந்து கொண்டிருந்த சூழல். சுட்டெரிக்கும் பாலைவனம், இரக்கமுள்ளவர்கள் கொண்டு வரும் உதவிப் பொருட்களை பறிப்பதற்கென்றே இரக்கமில்லாத கடற்கொள்ளையர்கள் மொத்தத்தில் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை. இந்த சூழலில் சர்வதேச சமூகத் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பெர்குஸன் என்பவர் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு உணவுகளையும் மருந்துகளையும் கொணடு செல்வதற்காக பிரின்ஸ் குழுவை சம்மதிக்க வைத்து அவரும் உடன் செல்கிறார்.
கடல் மார்க்கமாகவும் பிறகு பாலைவன பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள கடற்கொள்ளையர் தாக்குதலில் பெர்குஸன் காயமடைகிறார். குழுவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு யாராவது ஒருவர் பாதிக்கப்ட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் தன் உயிரையே பணயம் வைக்க முற்பட்டு பொருட்களை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் பார்னே.
ஒரளவு குணமடைந்து கண்விழிக்கும் பெர்குஸன் பார்னே கொண்டு செல்லும் மருந்து போதைக்கும் பயன்படுத்தலாம், இதை அங்குள்ள கடற்கொள்ளையர் தலைவனுக்கு தெரியும் என்பதை பிரின்ஸ் இடம் தெரிவிக்கிறார். பார்னேயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணரும் பிரின்ஸ் ஒரு பாதுகாப்பான மறைவிடத்தில் கப்பலையும் பெர்குஸனையும் விட்டுவிட்டு பார்னேக்கு உதவ ஜின்னுடன் விரைந்து செல்கிறார்.
கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்த பார்னேயை சூழ்ச்சியாக கொள்ளைக் கும்பல் மடக்கி விடுகிறது. தந்திரமாக கொள்ளையர்களுடன் போரிடும் பார்னேயுடன் பிரின்ஸ் இணைந்துக் கொண்டு கொள்ளையர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறார்கள். ஆத்திரமடையும் கொள்ளையர்கள் பார்னேயை சுட்டு விடுகிறார்கள். குண்டடிப்பட்ட பார்னேயுடன் மூவரும் தப்பித்து கர்ஜிக்கும் மணல்வெளியை நோக்கி விரைகிறார்கள். எஞ்சியிருக்கும் கொள்ளைக் கும்பல் அவர்களை துரத்துகிறது
தீடீரென மணல்வெளி பயங்கர சூறாவளிக் காற்றுடன் வீசத் தொடங்குகிறது. இதில் துரத்தி வந்த கொளளைக்கும்பல் மண் சுவர்கள் சரிந்து சமாதியாக்குகிறது. பிரின்ஸ் குழுவும் புயலில் சிக்கி மணலில் புதையுண்டு கிடக்கிறார்கள். இதற்கிடையே வானிலை அறிவிப்பை கேட்கும் பெர்குஸன் கப்பலில் உள்ள ரேடியோ மூலம் அங்கு உள்ள மீட்புக் குழுவிற்கு தகவல் அனுப்பி பிரின்ஸ் அண் கோவை பத்திரமாக மீட்டுவிடுகிறார். இவர்கள் எடுத்து வந்த உணவு, மருத்துவ பொருட்கள் பல உயிர்களை காக்க பயன்படுகின்றன.
இந்த கதையில் வரும் பாலைவன சண்டைகள், சீறிவரும் மணல்புயல், பிரின்ஸ் குழு படும் அவஸ்தைகள் என அனைத்தையும் மிகத் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் க்ரேக்.
பொதுவாக புத்தகங்கள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டும் இருக்கும். ஆனால் பிரின்ஸ் கதைகளில் சமூக உணர்வு, தியாகம், விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை இவைகளையே அதிகமாக கலந்து இருப்பார் கதாசிரியர் க்ரேக். பிரின்ஸ் கதைகளை நான் விரும்பி படிக்க இதுவும் ஒரு காரணம்.
வெறும் படம் மட்டும்தான் போடுவீங்களா? விமர்சனம், மலரும் நினைவுகள் எதுவும் இல்லையா?
ReplyDeleteபை தி வே, மீ த ஃப்ர்ஸ்ட்டு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நண்பர் முதலை பட்டாளம்,
ReplyDeleteஎனக்கும் பிடித்த கதை இது. ஒட்டகம் பார்நேய்வின் முகத்தை நக்கும் காட்சி இன்னும் என் மனதில் நிற்கிறது.
புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். பாருங்களேன்:
http://kakokaku.blogspot.com/2009/01/blog-post_22.html
நண்பரே,
ReplyDeleteபிரின்ஸ் கதைகளை யாரிற்கு தான் பிடிக்காது, கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களை ஆபிரிக்க கரைப்பகுதிகளில் தடுக்க உலக ராணுவமே போராடும் காலமிது. பிரின்ஸ் கதைகளை தமிழிற்கு அறிமுகப்படுத்திய திரு.விஜயனிற்கே எல்லாப் புகழும்.
ரத்தின சுருக்கமாக கதையினை சுவைகெடாது தந்திருக்கிறீர்கள்.//கர்ஜிக்கும் மணல்வெளியை // மயக்கும் சொல்லாடல், நானும் சில வேளைகளில் உபயோகித்தால் தவறாக நினைக்காதீர்கள்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
//இந்த கதையில் வரும் பாலைவன சண்டைகள், சீறிவரும் மணல்புயல், பிரின்ஸ் குழு படும் அவஸ்தைகள் என அனைத்தையும் மிகத் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் க்ரேக்.//
ReplyDeleteதிருத்தம் - அற்புத ஓவியங்களைத் தீட்டியவர் ஹெர்மன், கதாசிரியர் தான் க்ரெக்.
// பிரின்ஸ் கதைகளை நான் விரும்பி படிக்க இதுவும் ஒரு காரணம்.//
நாங்களும்தான்.
தலைவர்,
அ.கொ.தீ.க.
From The Desk Of Rebel Ravi:
ReplyDeletevery good post on a very good book. there was a movie which was inspired on this story (or is it the story got inspired from the movie?) somewhere around 1970. couldn't remember the title of the movie.
thanks for the post.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
BOSS THIS STORY IS ONE OF THE VERY BEST OF PRINCE.THE FRIENDSHIP BETWEEN BARNAY AND DHATOO THE CAMEL IS ONE THE HIGHLIGHT.
ReplyDeletelatenalum en vazthukal nanba miga arumaiana pathivu.
ReplyDelete