இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)
இந்திரஜால் சித்திரக்கதையின் தோற்றம்
டைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)
அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக்
கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ்
கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகதூர், ஆதித்யா, புரூஸ்லீ, வால்டிஸ்னியின் கதைகள் (ராபின் ஹுட்) போன்ற நாயகர்களின் கதைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ், இந்தி, தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் இந்திரஜால் காமிக்ஸ்
வெளியிடப்பட்டது. சித்திரக்கதை உலகில் வேதாளன்
கதைகள் மூலமே இந்திரஜால் காமிக்ஸ் தனித்து அடையாளம் காணப்பட்டது.
1965-ஜனவரி மாதம் முதல் தமிழில் மாதம் ஒரு இதழ் என்ற
வரிசையில் சித்திரக்கதைகள் வெளியிடப்பட்டன. முதல் 24 இதழ்கள் வரை, ஒரு மாயவிளக்கு அருகே ஒரு சிறுவன் உட்கார்ந்து இருப்பது போலவும், அந்த மாய விளக்கிலிருந்து வெளியாகும் புகை அவனைச் சுற்றி இருப்பது போலவும் லோகோவை
அமைத்து வெளியிட்டனர். 25 வது இதழுக்குப் பின்னர் வெளிவந்த இதழ்களிலிருந்து வெறும் மாயவிளக்கு (அலாவூதீனின் அற்புத விளக்கு போன்று) மட்டுமே லோகோவாக வெளியிட்டனர். 1967-ஜனவரி முதல் மாதம் இருமுறை இதழாகவும், 1983-ஜனவரி
மாதம் முதல் வார இதழாகவும் மாற்றப்பட்டது.
இவற்றைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இவ்விதழுக்கு இருந்த வரவேற்பினை
அவதானிக்க முடிகின்றது. 1965 முதல் 1988 வரை {1989 வரை வெளிவந்ததாக சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை) 204 + 90 + 278 -மொத்தம் 572 கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்.
வண்ணங்களை
இதழ்களுக்குள் பயன்படுத்தி வாசக ஈர்ப்பினை ஏற்படுத்தும் போக்கினை இதழியல்
வரலாற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்ட
ஓவியங்களைப் பல்வண்ணங்களில் வெளியிட்ட பத்திரிகைகள், சித்திரக்கதைகளைப் பொறுத்தவரை
இரு வண்ணங்களையே பயன்படுத்தி வந்தன. சிறப்பு இதழ்களில் மட்டுமே பலவண்ணங்கள்
பயன்படுத்தப்பட்டன. இப்போக்கினை மாற்றித்
தமிழில் முழுக்க முழுக்க பலவண்ணத்தில் சித்திரக்கதைகளை வெளியிட்டது இந்திரஜால்
காமிக்ஸ். வெளியிடப்பட்ட முதல் சித்திரக்கதை இதழாகவும், மொழிபெயர்ப்புச்
சித்திரக்கதை இதழாகவும் சித்திரக்கதை வரலாற்றில்
இடம்பிடித்துள்ளது.
இந்திரஜால் மூன்று வித காலகட்டமாக வெளிவந்துள்ளது -
1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை 60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது..
சில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 150 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது
இன்னிங்ஸை தொடர்ந்த்து. 1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின்
உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.
இந்திரஜால் தமிழ் பட்டியலை இதுவரை யாரும் தொகுத்து போடவில்லை என்கிற ஆதங்கம் இருந்தது. இதனை நாமளாவது தொகுத்து போடுவோமே
என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சிதான் இது. இதன் மொத்த பட்டியலையும் கொடுக்க
ஆசைதான் ஆனால், இதை தொகுக்கவே பல வருடங்கள் ஓடி விட்டது. இனிமேல் விடுபட்ட சில கதைகளின் பெயர் தெரியவரும் போது அதை இணைத்துக் கொள்ளலாம்
என்ற நம்பிக்கையில் இந்த பட்டியலை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு இதிலுள்ள நிறைகுறைகள் ஏதேனும் இருந்தால் சங்கடப்படாமல் தெரியப்படுத்துங்கள்.
இத்தொகுப்பு உருவாக மிக முக்கிய காரணமாயிருந்த சகோதரி திருமதி
பிரபாவதி அவர்களுக்கும், ஆக்கத்திற்கு உயிர் கொடுத்து
உதவிய எனது நண்பர் இரா.தி. முருகன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பட்டியலுக்கு தங்களால் இயன்ற உதவிக்கரம் நீட்டிய கெளதம், அஸ்லம் பாஷா, பெங்களூர் சுப்பிரமணி, திருப்பூர் குமார், மாயாவி சிவா, சுரேஷ் சந்த், ஜானி. அலெக்ஸாண்டர் வாஸ் ஆகியோருக்கும்
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
முதல் தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974)
கதைநாயகர்
|
தலைப்புக்கள்
|
எண்
|
வருடம்
|
|
Phantom
|
வேதாளன் புதையல்
|
1
|
ஜன 1965
|
|
Phantom
|
வேதாளன் கட்டுண்டார்
|
2
|
பிப் 1965
|
|
Phantom
|
சூனியக்காரியின் சாபம்
|
3
|
மார் 1965
|
|
Phantom
|
கிலுகிலுப்பை மர்மம்
|
4
|
ஏப் 1965
|
|
Phantom
|
மர்மத் தளபதி
|
5
|
மே 1965
|
|
Phantom
|
அலக்ஸாந்தரின் வைரக்கோப்பை
|
6
|
ஜூன் 1965
|
|
Phantom
|
மர்மப் பிரயாணி
|
7
|
ஜூலை 1965
|
|
Phantom
|
தங்க ராஜாத்தி
|
8
|
ஆக 1965
|
|
Phantom
|
மந்திரவாதி மூகூ
|
9
|
செப் 1965
|
|
Phantom
|
பாங்குக் கொள்ளை
|
10
|
அக் 1965
|
|
Phantom
|
பித்து ராஜா பெப்பே
|
11
|
நவம் 1965
|
|
Phantom
|
களவு போன முத்துமாலை
|
12
|
டிசம் 1965
|
|
Phantom
|
குங்கும சூனியக்காரி
|
13
|
ஜன 1966
|
|
Phantom
|
மனித விலங்கு
|
14
|
பிப் 1966
|
|
Phantom
|
விண்வெளிப் பயணம்
|
15
|
மார் 1966
|
|
Phantom
|
வனக் காவல்
|
16
|
ஏப் 1966
|
|
Phantom
|
காண்டார் மர்மம்
|
17
|
மே 1966
|
|
Phantom
|
பேசும் மிருகம்
|
18
|
ஜூன் 1966
|
|
Phantom
|
நகேபர் கோட்டை மர்மம்
|
19
|
ஜூலை 1966
|
|
Phantom
|
மீன்கொத்தி ராஜா
|
20
|
ஆக 1966
|
|
Phantom
|
சதுப்பு நகரம்
|
21
|
செப் 1966
|
|
Phantom
|
ஊகூரு பிடாரி
|
22
|
அக் 1966
|
|
Walt Disney
|
புதையல் தீவு
|
23
|
நவம் 1966
|
|
Phantom
|
அசுரக் குரங்குகள்
|
24
|
டிசம் 1966
|
|
Walt Disney
|
ராபின் ஹூட்
|
25
|
ஜன 1, 1967
|
|
Phantom
|
கண்ணாம்பூச்சி ஆட்டம்
|
26
|
ஜன 15, 1967
|
|
Walt Disney
|
வீரன் ஜாரோ
|
27
|
பிப் 1, 1967
|
|
Walt Disney
|
விண்வெளி மனிதன்
|
28
|
பிப் 15, 1967
|
|
Phantom
|
வம்பா அருவிச் சாவடி
|
29
|
||
Walt Disney
|
ராப் ராய்
|
30
|
||
Phantom
|
திரைமுகி எரிமலை
|
31
|
||
Walt Disney
|
விமானந்தாக்கிக் கப்பல்
மறைந்த மர்மம்
|
32
|
||
Phantom
|
காற்றோடு வந்த காரிகை
|
33
|
||
Walt Disney
|
காலப் பூட்டு
|
34
|
||
Phantom
|
வேதாளனும் மரணவலையும்
|
35
|
||
Mandrake
|
யுகநாச யோகி
|
36
|
||
Phantom
|
வீர மங்கை வேதாளவதி
|
37
|
||
Phantom
|
சூனிய மருத்துவரின் சதி
|
38
|
||
Phantom
|
வேதாள மாயாத்மாவின் மர்மங்கள்
|
39
|
||
Mandrake
|
கருப்பு மாயாவி
|
40
|
||
Phantom
|
ஆற்றுக் கள்ளர்கள்
|
41
|
||
Phantom
|
வெள்ளைத் தேவதை
|
42
|
||
Mandrake
|
பட்டிணப் பூங்காவில் பயங்கரக் கொள்ளை
|
43
|
||
Phantom
|
மாபெரும் விடுகதை
|
44
|
||
Phantom
|
முரட்டு வில்லனின் கைவரிசை
|
45
|
டிச 1 1967
|
|
Phantom
|
வஞ்சகியின் வலை
|
46
|
||
Phantom
|
பயங்கரப் புலி
|
47
|
||
Phantom
|
48
|
|||
Phantom
|
கண்விழித்த கானகபூதம்
|
49
|
||
Phantom
|
50
|
|||
Phantom
|
கேசரி
|
51
|
||
Phantom
|
போலிப் பதுமை
|
52
|
||
Mandrake
|
மோசக்கார மருத்துவர்
|
53
|
||
Phantom
|
டயானாவின் பயங்கரப் பயணம்
|
54
|
||
Phantom
|
முத்து மாளிகை
|
55
|
may 1 1968
|
|
Mandrake
|
பொம்மைப் புதிர்
|
56
|
may 15 1968
|
|
Phantom
|
வீர வேதாளன்-கடற் கடவுள்
|
57
|
||
Mandrake
|
கூடு பாய்ந்த கொடும் பூதம்
|
58
|
||
Phantom
|
விபரீத வேட்டை
|
59
|
june 1 1968
|
|
Mandrake
|
விண்வழி வந்த விடுகதை
|
60
|
july 15 1968
|
|
Phantom
|
பாழ்மனை மர்மம்
|
61
|
august 1 1968
|
|
Flash Gordon
|
மரண வீரப் போட்டி
|
62
|
august 15 1968
|
|
Phantom
|
இரட்டை கரடியர்கள்
|
63
|
september 01 1968
|
|
Phantom
|
காவு கேட்ட காட்டேரி
|
64
|
september 15 1968
|
|
Mandrake
|
நாசக்கார நமன்
|
65
|
||
Phantom
|
தளபதி மர்மம்
|
66
|
||
Mandrake
|
சதிகாரச் சங்கம்
|
67
|
||
Phantom
|
நட்சத்திரக் கடத்தல்
|
68
|
||
Flash Gordon
|
மரண மண்டலம்
|
69
|
||
Phantom
|
முகமூடி மேதாவி
|
70
|
||
Mandrake
|
அசுரப் பல்வவி
|
71
|
||
Phantom
|
தங்க மயிலறகு மர்மம்
|
72
|
||
Mandrake
|
அண்டவெளி கடந்து வந்த ஆபத்து
|
73
|
||
Phantom
|
கடலடிக் குகை மர்மம்
|
74
|
||
Flash Gordon
|
மிலேச்சன் மிசிங்கு
|
75
|
||
Phantom
|
நீலக்காலிக் கும்பல்
|
76
|
||
Phantom
|
குரங்குப் பூச்சாண்டி
|
77
|
||
Mandrake
|
ஆளவந்த அசுர எந்திரம்
|
78
|
||
Phantom
|
கம்பி நீட்டிய கைதிகள்
|
79
|
||
Mandrake
|
கைதியின் வஞ்சம்
|
80
|
||
Phantom
|
எதிர் நீச்சல்
|
81
|
||
Mandrake
|
பூதப் பூச்சி
|
82
|
||
Phantom
|
சவால் விட்ட சடலம்
|
83
|
||
Phantom
|
மோகன புரி
|
84
|
||
Phantom
|
கவர்னரின் பிரச்சினை
|
85
|
10.1. 1969
|
|
Phantom
|
வேதாள வேட்டை
|
86
|
||
Phantom
|
புலி மகள்
|
87
|
||
Phantom
|
கேள்விமுறையற்ற கேடிகும்பல்
|
88
|
||
Flash Gordon
|
சூனியக்கார ராணி
|
89
|
||
Phantom
|
மாண்டாரா மாயாத்மா?
|
90
|
||
Phantom
|
மர்மப் பை
|
91
|
1. 1. 1970
|
|
Flash Gordon
|
இரட்டை உடல் அரக்கன்
|
92
|
15. 1. 1970
|
|
Phantom
|
குற்றவாளிகளின் கோட்டை
|
93
|
1.2. 1970
|
|
Phantom
|
பேய்க் குளம்
|
94
|
15.2. 1970
|
|
Phantom
|
டமார போதை
|
95
|
1. 3. 1970
|
|
Phantom
|
புதிர்ப் பொம்மை
|
96
|
15. 3. 1970
|
|
Phantom
|
கூலி கொடுக்க வந்த குரங்கு
|
97
|
1. 4 . 1970
|
|
Flash Gordon
|
படர்ந்து வரும் பயங்கரம்
|
98
|
15. 4. 1970
|
|
Phantom
|
முடிவு தெரியாத காட்டாறு
|
99
|
1. 5. 1970
|
|
Phantom
|
அக்னி பரிட்சை
|
100
|
15. 5. 1970
|
|
Flash Gordon
|
வெட்டுக்கிளியர் அட்டூழியம்
|
101
|
1. 5. 1970
|
|
Phantom
|
திருமண பாரம்
|
102
|
15. 6. 1970
|
|
Phantom
|
வேதாளக் கோப்பை
|
103
|
1. 7. 1970
|
|
Phantom
|
ஐம்பதாம் தாரம்
|
104
|
15.7.1970
|
|
Phantom
|
மரண பூமி
|
105
|
1. 8. 1970
|
|
Phantom
|
தீவட்டிக் கும்பலின் திருவிளையாடல்
|
106
|
15. 8. 1970
|
|
Phantom
|
இரும்பு பூதம்
|
107
|
1. 9. 1970
|
|
Phantom
|
முகமூடி நடனம்
|
108
|
15. 9. 1970
|
|
Phantom
|
ஒற்றர் சதி
|
109
|
||
Phantom
|
இரு கொலையாளிகள்
|
110
|
||
Mandrake
|
மாண்டான் சூனிய வலை
|
111
|
||
Phantom
|
மலைப் பீட மர்மம்
|
112
|
15. 11. 1970
|
|
None
|
113
|
|||
None
|
114
|
|||
Phantom
|
போலிச் சுவடு
|
115
|
||
Phantom
|
தப்பி வந்த தறுதலைகள்
|
116
|
||
Mandrake
|
கடலில் நடந்த கூத்து
|
117
|
1. 2. 1971
|
|
Mandrake
|
அபாய மூட்டை
|
118
|
15.2.1971
|
|
Phantom
|
பறிபோன பதுமை
|
119
|
1. 3. 1971
|
|
Phantom
|
கோப்பைக் கொள்ளை
|
120
|
15.3.1971
|
|
Phantom
|
ஆட்கொல்லி அரங்கம்
|
121
|
1. 4. 1971
|
|
Mandrake
|
கலைஞர் கடத்தல்
|
122
|
15.4.1971
|
|
Phantom
|
பல தலை பயங்கரம்
|
123
|
1. 5. 1971
|
|
Phantom
|
குற்றப் பாடசாலை
|
124
|
15. 5. 1971
|
|
Phantom
|
பொன் வேட்டை
|
125
|
1.6.1971
|
|
Phantom
|
எத்து-தத்து-சொத்து
|
126
|
15.6.1971
|
|
Phantom
|
மழை தடுத்தவன்
|
127
|
1.7. 1971
|
|
Mandrake
|
வெறிநாய் வேட்டை
|
128
|
15. 7. 1971
|
|
Phantom
|
வெறியனின் வேட்டை
|
129
|
1. 8. 1971
|
|
Phantom
|
யானை மயக்கி
|
130
|
15. 8. 1971
|
|
Phantom
|
பிணம் புரட்டி முனை
|
131
|
1. 9. 1971
|
|
Mandrake
|
சாத்தான் தர்பார்
|
132
|
15. 9. 1971
|
|
Phantom
|
மாயக் கருங் கொள்ளை
|
133
|
1. 10. 1971
|
|
Mandrake
|
எட்டாம் இடத்தில் சனி
|
134
|
15. 10. 1971
|
|
Phantom
|
மறைமுகப் பிரயாணி
|
135
|
1. 11. 1971
|
|
Mandrake
|
நாகப் புற்று
|
136
|
15. 11. 1971
|
|
Phantom
|
வாலில்லாப் புதிர்
|
137
|
1. 12. 1971
|
|
Phantom
|
கோமகனின் கொட்டம்
|
138
|
15. 12. 1971
|
|
Phantom
|
சூனிய மருத்துவன் ஜுலாங்கா
|
139
|
1. 1. 1972
|
|
Mandrake
|
தங்க பகாசுரன்
|
140
|
15. 1. 1972
|
|
Phantom
|
கல்லுளி மங்கன் சாபம்
|
141
|
1.2.1972
|
|
Phantom
|
யானையின் வஞ்சம்
|
142
|
15. 2. 1972
|
|
Mandrake
|
களிமண் ஒட்டகம்
|
143
|
1. 3. 1972
|
|
Phantom
|
விமானக் கடத்தல்
|
144
|
15. 3. 1972
|
|
Mandrake
|
பறக்கும் தட்டு
|
145
|
1. 4. 1972
|
|
Phantom
|
தங்கப் பணயம்
|
146
|
15. 4. 1972
|
|
Phantom
|
எண்ணெய் ஸ்வாஹா
|
147
|
1. 5. 1972
|
|
Mandrake
|
பணம் உறிஞ்சும் சுறா
|
148
|
15. 5. 1972
|
|
Phantom
|
மயான குகை
|
149
|
1. 6. 1972
|
|
Phantom
|
எட்டாத கபாலக் குகை
|
150
|
15. 6 . 1972
|
|
Mandrake
|
கால ரதம்
|
151
|
1. 7. 1972
|
|
Phantom
|
எரிமலை ஆவிகள்
|
152
|
15. 7. 1972
|
|
Mandrake
|
எமக்குறி-8
|
153
|
1. 8 . 1972
|
|
Mandrake
|
மர்மச் சிறுமி
|
154
|
15. 8 . 1972
|
|
Phantom
|
வலை மூடிய நாடு
|
155
|
||
Phantom
|
விசித்திர சவாரி
|
156
|
||
Phantom
|
எந்திரப் பூச்சிகள்
|
157
|
||
Phantom
|
மரண ஓலை
|
158
|
||
Mandrake
|
கொள்ளை மாயம்
|
159
|
||
Phantom
|
கப்பலேறிய களவு
|
160
|
||
Phantom
|
நாமம் போட்ட கழுகுகள்
|
161
|
1. 12. 1972
|
|
Flash Gordon
|
கடலடிக் கொள்ளை
|
162
|
15. 12. 1972
|
|
Phantom
|
தங்கவால் தாரகை
|
163
|
1. 1. 1973
|
|
Phantom
|
சூனிய மோகினி
|
164
|
1. 15. 1973
|
|
Phantom
|
பாம்பு மாரி
|
165
|
1. 2. 1973
|
|
Mandrake
|
பூதப் பிறவி
|
166
|
15. 2 . 1973
|
|
Flash Gordon
|
எந்திரக் குடும்பம்
|
167
|
1. 3. 1973
|
|
Phantom
|
விதியின் சிற்பி
|
168
|
15. 3. 1973
|
|
Phantom
|
நாயகியின் டோபா
|
169
|
1. 4. 1973
|
|
Mandrake
|
மந்திரப் படிகம்
|
170
|
15. 4. 1973
|
|
Phantom
|
தலைகாத்த முத்திரை
|
171
|
1. 5. 1973
|
|
Phantom
|
தங்க மலர்
|
172
|
15. 5. 1973
|
|
Phantom
|
வைர வழிபறி
|
173
|
1. 6. 1973
|
|
Phantom
|
மூளை ஏலம்
|
174
|
15. 6 . 1973
|
|
Flash Gordon
|
போதை மருந்து மோசடி
|
175
|
1. 7. 1973
|
|
Phantom
|
டாங்கர் டணார்…ர்
|
176
|
15. 7. 1973
|
|
Mandrake
|
கொலைகார வெறியாட்டம்
|
177
|
1. 8. 1973
|
|
Phantom
|
தங்க ரிஷபம்
|
178
|
15. 8. 1973
|
|
Mandrake
|
செவ்வாய் பூச்சாண்டி
|
179
|
1. 9. 1973
|
|
Mandrake
|
சூ! சேவல் நாகம்
|
180
|
15. 9. 1973
|
|
Phantom
|
முரட்டுத் தோல் பூதம் |
181
|
1. 10. 1973
|
|
Mandrake
|
டாக்டர் கமகம...
|
182
|
15. 10. 1973
|
|
Phantom
|
வெள்ளுலோக சமாதி
|
183
|
1. 11. 1973
|
|
Phantom
|
கஞ்சாப் பாறை விவகாரம்
|
184
|
15. 11. 1973
|
|
Mandrake
|
அஷ்ட துஷ்டன்
|
185
|
1. 12. 1973
|
|
Phantom
|
கழுகு இறக்கை காருடம்
|
186
|
15.12.1973
|
|
War
|
எழுதி வைத்த யம குண்டு
|
187
|
1.1.1974
|
|
Phantom
|
அடக்குவாரற்ற மந்தை
|
188
|
15.1.1974
|
|
War
|
பாலம் தகர்த்த படை
|
189
|
1.2.1974
|
|
Phantom
|
அண்டவெளி அசுர எலியார்
|
190
|
15. 2. 1974
|
|
Phantom
|
மரணச் சதுப்பு
|
191
|
1. 3. 1974
|
|
War
|
சுகா நல்லா டாங்குப் போர்
|
192
|
15. 3. 1974
|
|
War
|
போர் முனையிலே பொக்கிஷம்
|
193
|
1. 4. 1974
|
|
Phantom
|
கேடியின் மகன்
|
194
|
15. 4. 1974
|
|
Phantom
|
கூண்டுக்குள் வாண்டுராணி
|
195
|
1. 5 .1974
|
|
War
|
மலேயாவில் மர்மப் போர்
|
196
|
15. 5. 1974
|
|
Mandrake
|
படிக லோகப் பாடல்
|
197
|
1. 6. 1974
|
|
Phantom
|
அபசகுணச் சிலை
|
198
|
15. 6. 1974
|
|
Mythology
|
இராம சரித மானஸ்
|
199
|
1. 7. 1974
|
|
Phantom
|
சுறாத்தீவில் சிக்கிய கைதி
|
200
|
15. 7. 1974
|
|
Phantom
|
ஊ... ரத்தக் காட்டேரி
|
201
|
1. 8. 1974
|
|
History
|
யாருக்காக மடிந்தனர்
|
202
|
15. 8. 1974
|
|
Mandrake
|
குழிபறிக் கொள்ளை
|
203
|
1. 9. 1974
|
|
Phantom
|
நள்ளிரவில் கள்ளன்
|
204
|
15. 9. 1974
|
முதல் தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் அட்டைப்படங்கள்
(உதாரணப்படங்கள்)
வாவ்...சூப்பர்...!!!!
ReplyDeleteநன்றி
Deleteநானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்
DeleteEnkita indhula iruka oru silla books iruku yaarukavadhu venanuna contact 6382800680
Deleteமிக கடினமான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபாட்டோடு செய்துள்ளீர்கள்..
ReplyDeleteபாராட்டுக்கள் அண்ணா ��������������
நன்றி சகோ
Deleteபாராட்ட வார்த்தைகளில்லை.. செம்ம .. ��������
ReplyDeleteநன்றி ஜி
Deleteநன்றி ...இனி விட்டுப்போன இந்திரஜால் புத்தகங்களை தேட வேண்டும். :)
ReplyDeleteபுயல் தேடிய புதையல் 😝
DeleteGreat Marvelous Hats off well done keep it up
ReplyDeleteThank you sir
Deleteஅண்ணா
ReplyDelete150 எட்டாத கபால குகை
185 அஷ்ட துஷ்டன்
Oh! மாற்றி (திருத்திடுவோம்) விடுவோம் ப்ரோ
Delete185 வது " அஷ்ட துஷ்டன் " எனில் அப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?
Delete134 anna
DeleteName thappa irukku anna
ReplyDeleteIt needs lot of dedication, hats off to your hard and enthusiastic work kaleel ji
ReplyDeleteThanks ji
Deleteawesome ji
ReplyDeleteஅப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?
ReplyDelete185 வது " அஷ்ட துஷ்டன் " எனில் அப்ப " எட்டாவது இடத்தில சனி " ன் வரிசை எண் என்ன ?
ReplyDeleteKaleel Sir, could share your email id?
ReplyDeleteakaleel1997@gmail.com
Deleteபிரம்மிக்க வைக்கும் முயற்சி... வாழ்த்துக்கள்... மரண வலையில் மாயாவி குமுதத்திலும் தொடராக வந்ததாக ஞாபகம்...
ReplyDeleteஎப்படி புத்தகத்தை வாங்குவது. Callme 9444112647
Deleteவரிசை எண் 155 வலை மூடிய மலை நாடு
ReplyDeleteவரிசை எண் 181 முரட்டுத்தோல் பூதம்
மேற்க்கண்ட தங்களது பதிவில் சேர்த்து கொள்ளவும்
PDF file irukkuma friends
ReplyDeleteமுல்லை தங்கராசு நாவல்கள் உள்ளதா சகோ
ReplyDeleteநானும் வேதாளனின் பரம ரசிகன் எனக்கு எல்லா புத்தகங்களும் வேணும். என் mobile ne 94441 12647. எப்படி வாங்குவது என்று சொல்லுங்கள்
ReplyDeletePlease add 118 as "அபாய மூட்டை பிப் 15 1971" Mandrake
ReplyDeleteநான் முகமூடி ரசிகன் ஆரம்பகால இந்திரஜால காமிக்ஸ் எங்கு கிடைக்கும்
ReplyDeleteஅருமையான தொகுப்பு Friend
ReplyDeleteFor Tamil indrajaal and other Tamil comics ,magazine contact me WhatsApp/call 7870475981
ReplyDelete